அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட ஆணையாளராக ஜனாதிபதி சாரணன் நியமனம்!

 இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட ஆணையாளராக ஜனாதிபதி சாரணன் நியமனம்!



இலங்கை சாரணர் சங்கத்தினால் வவுனியா  மாவட்டத்திற்கான புதிய ஆணையாளராக யோகதாஸ் கஜேந்திரன் அவர்கள் (24.01) அன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனத்தினை பிரதம ஆணையாளர் ஜனப்பிரித் பெர்ணாண்டோ அவர்கள் புதிய வவுனியா மாவட்ட ஆணையாளர் கஜேந்திரன் அவர்களிடம் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய தலைமைக் காரியாலயத்தில் வைத்து வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி சாரணன் யோகதாஸ் கஜேந்திரன் அவர்கள் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும், ஜனாதிபதி விருது பெற்ற சாரணரும் ஆவர். இவர் 2002ம் ஆண்டு பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய நட்புறவு பாசறையில் இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்தார்.





இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட ஆணையாளராக ஜனாதிபதி சாரணன் நியமனம்! Reviewed by வன்னி on January 25, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.