முல்லைத்தீவில் இந்திய மீனவரின் உடலம் கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவில் இந்திய மீனவரின் உடலம் கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் உடலம் இன்று 19-01-24 கரையோதுங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த உடலம் கரை ஒதுங்கி உள்ளது
குறித்த உடல் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கின்றது
இதில் உள்ள கான்களில் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன
குறித்த உடலம் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது
பொலிசார் உடலத்தினை மீட்பதற்காக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து நீதிபதியை அழைத்துச் சென்று உடலத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்
குறித்த உடலமானது இராணுவத்தினரின் முகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் ஊடகங்கள் வீடியோ பதிவு செய்ய இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர்.

No comments:
Post a Comment