அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் உலர் உணவுப் பொதிகள்!

 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் உலர் உணவுப் பொதிகள்!




அண்மையில் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் ஒரு பகுதி வெள்ள நீரில் மூழ்கியிருந்தது.

குறித்த பிரதேசத்தில் வசித்த மக்கள் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்தனர். அவ்வாறான சந்தர்ப்பத்தில் பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் பல்வேறு உதவி வழங்கும் நிறுவனங்களினாலும் தனி நபர்களாலும் சமைத்த உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

தற்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் குறித்த பிரதேசத்தில் வசித்த குடும்பங்களுக்கு 2024.01.18 ஆம் திகதி சாய்ந்தமருது கலாச்சார மண்டபத்தில் வைத்து மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கம் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.

மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் மற்றும் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா ஆகியோரும் விஷேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்ஷான், கிராம சேவை உத்தியோகத்தர்களான ஏ.எம். அஜ்ஹர், ஏ.ஏ. நஜீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர் என்.எம். ஸிராஜ்டீனின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் ஏ.எல். பௌசர் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் வசித்து, 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சுனாமி கடல்பேராலையால் பாதிக்கப்பட்டு மீள் குடியேற்றப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.










வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கத்தின் உலர் உணவுப் பொதிகள்! Reviewed by வன்னி on January 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.