அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற தைபொங்கல் நிகழ்வுகள்

 மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற தைபொங்கல் நிகழ்வுகள்.



உலக வாழ்தமிழர்கள் இன்றைய தினம் திங்கட் கிழமை (15) தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில்,மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் 

தைப்பொங்கல் பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் ,நிதி நிறுவங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதோடு,விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களிலும் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றது,

மேலும் மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி  மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி,விலைவாசி அதிகரிப்பு,வரி அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் மக்கள் வழமையிலும் பார்க  பொங்கல் கொண்டாட்டங்களை தவிர்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











மன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற தைபொங்கல் நிகழ்வுகள் Reviewed by வன்னி on January 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.