அண்மைய செய்திகள்

recent
-

போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

 போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.




தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பெற்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்கிழமை) புதுக்குடியிருப்பு பிரதேசசபையில் இடம்பெற்றிருந்தது.


குறித்த கௌரவிப்பு நிகழ்வானது புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளர் ச.கிருஷாந்தன் தலைமையில் பிரதேசசபை மண்டபத்தில் இன்று (09.01.2024) காலை 10.45 மணியளவில் நடைபெற்றது.


புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில்  நடாத்தப்பட்ட கட்டுரை, வாசிப்பு, நுண்ணறிவு, பேச்சு போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு கலந்து கொண்ட அதிதிகளினால் பாராட்டி சான்றிதழ்களும், பரிசுப் பொருட்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


தரம் 1, 2,3 மாணவர்களுக்கிடையே வாசிப்பு போட்டியும், தரம் 4,5 மாணவர்களுக்கிடையே நுண்ணறிவு, பொதுவிவேகமும், தரம் 6,7 மாணவர்களுக்கிடையே பேச்சு போட்டியும், தரம் 8,9,10,11 மாணவர்களுக்கிடையே கட்டுரை போட்டியும் இடம்பெற்றிருந்தது.


நிகழ்வில் பாடசாலை மாணவர்களது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததோடு அறிவொளி புத்தகசாலையினால் புதுக்குடியிருப்பு பிரதேசசபை நூலகத்திற்கென ஒரு தொகை புத்தகங்கள் பிரதேச சபை செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ச.ஜசிந்தன், புதுக்குடியிருப்பு கோட்டக்கல்வி அதிகாரி சி.பாஸ்கரன், ஒட்டுசுட்டான் இந்துதமிழ்கலவன் வித்தியாலய அதிபர் திருமதி வெ.நித்தியகலா, ஒலுமடு தமிழ் வித்தியாலய அதிபர் ஜெ.ஜெகதீபன், ஓய்வுநிலை கோட்டக்கல்வி அதிகாரி சி.சுப்ரமணியேஸ்வரன், ஓய்வுநிலை அதிபர் இ.செல்வநாயகம், துணுக்காய் பிரதேச சபை செயலாளர் அ.பாலகிருபன், மாந்தை கிழக்கு பிரதேச சபை செயலாளர் செ.செல்வகுமார் , மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.














போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு. Reviewed by வன்னி on January 09, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.