அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம்!

 மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம்!



கல்முனை கல்வி வலய மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலயத்திலிருந்து இவ்வருடம் க.பொ.த. (சா/தர) மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம் புதன்கிழமை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையிலான கல்வி அதிகாரிகள் குழுவினரின் பங்கேற்புடன் நடைபெற்றது. 

விஷேட பாடசாலைத் தரிசிப்பில் ஈடுபட்டு பலதரப்பட்ட விடயங்களை அவதானித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய வலயக் கல்வி பணிமனை அதிகாரிகள்  பாடசாலையின் பெளதீக வள அபிவிருத்திக்காக துரிதமாக இரண்டு மில்லின் ரூபாவினை பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளனர். 

மேலும் கடந்த 2023 டிசம்பரில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.சஹதுல் நஜீம்  அவர்களின் சிபாரிசின் அடிப்படையில் ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் கல்முனை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள்,  பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேம்படுத்தும் நோக்குடனான கூட்டம்! Reviewed by வன்னி on January 25, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.