அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18வது நினைவுதினம் அனுஸ்டிப்பு!

 ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18வது நினைவுதினம் அனுஸ்டிப்பு.



படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 18வது நினைவுதினம் வவுனியா ஊடகஅமையத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.  

இதன்போது சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா ஊடக மையத்தின் தலைவர் கு.கோகுலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் வைத்து படுகொலைசெய்யப்பட்டிருந்தார். எனினும் இதுவரை அவரது படுகொலையுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 18வது நினைவுதினம் அனுஸ்டிப்பு! Reviewed by வன்னி on January 24, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.