இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கு கடும்போட்டி.
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கு கடும்போட்டி.
சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இவ்வாறான நிலையில், புதிய தலைமைக்கான வேட்பாளர்களில் சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
இலங்கை தமிழரசு க்கட்சியின் தற்போதைய தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் 20ஆம் திருகோணமலையில் மத்திய குழு கூட்டத்தினைக் கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுமந்திரன், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோர் இடையே மும்முனைப் போட்டி நிலவுவதால் பொதுச்சபை உறுப்பினர்களின் மூலம் இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக தலைமைத் தெரிவு நடைபெறவுள்ளது.

No comments:
Post a Comment