தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 150 குடும்பங்களுக்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு 150 குடும்பங்களுக்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு.
பிறந்திருக்கும் 2024ம் ஆண்டின் தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு பொங்கல் பானை மற்றும் பொங்கல் பொருட்கள் மற்றும் தலா ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 500 ரூபா பணம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுமடு பிரதேசத்தில் சமூக செயற்பாட்டாளர்களின் ஒழுங்கு படுத்தலில் விசுமடு பகுதியிலுள்ள தெரிவுசெய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கே இவ்வாறு பொங்கல் பாணைகள் பொங்கல் பொருட்கள் மற்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 500 ரூபா நிதி என்பன வழங்கிவைக்கப்பட்டுள்ளது
மரபு திங்கள் தினத்தையொட்டி கனடா நாட்டின் மொன்றியல் நகரிலிருந்து வாகீசன் அவர்களின் தலைமையில் கருணானந்தம் பாலசிங்கம், கந்தசாமி யோகநாதன், நடராசா வாகீசன் , ஸ்ரீ குருக்கள் ஐயா,கல்யாண சுந்தரம் ஐயா, கதிரேசு புஸ்பானந்தம், சிவசுருதி சிவநேசன்,இலச்சுமணன் இரவீந்திரன்,கந்தசாமி அரியநாயகம், சுப்பையா வசந்தன், சோதிசிங் பாலரமணன் ,ரமேஸ் குருக்கள் ஐயா ,விசாகன் குருகள் ஐயா ஆகியோர்களி நிதிப்பங்களிப்புடன் குறித்த பொருட்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (13) மாலை விசுவமடு பகுதியில் வே.கரிகாலன் தலைமையில் இடம்பெற்றது
இதன்போது தெரிவுசெய்யப்பட்ட 150 குடும்பங்களுக்கு விசுவமடு பிரதேசத்தின் சமூக செயற்பட்டார்களால் குறித்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment