அண்மைய செய்திகள்

recent
-

தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் செயலமர்வு - 2024

 தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் செயலமர்வு - 2024



மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்கா மற்றும் YMMA மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் KDMC நெனசல, கல்முனை கல்வி நிறுவனத்தின் மூலமாக (18) இன்று காலை முதல் மாலை வரை தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் சம்பந்தமான செயலமர்வு அமைப்பின் பணிப்பாளரும், YMMA மாவடிப்பள்ளி கிளையின் தலைவருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் KDMC கல்வி நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. 


இச் செயலமர்வில் வளவாளராக சம்மாந்துறை பிரதேச செயலக மென்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.எம்.எஸ். இர்பான் மௌலானா கலந்து கொண்டு இளைஞர் யுவதிகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால கல்வி மற்றும் தொழில நுட்பங்கள் பற்றி விரிவுரையாற்றினார்.


மேலும் KDMC நெனசல கல்முனை கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜா, கல்வியின் தற்போதைய நிலை, தொழில் வழிகாட்டல், எதிர்கால இளைஞர்களின் சிந்தனை, தனியார் கல்வியின் அனுகூலம் என பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.


மேலும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கின் கேடய அமைப்பின் தலைவரும், அக்கறைப்பற்று மாநகரசபை முன்னாள் உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் அவர்கள் கலந்துசிறப்பித்ததுடன் மேலும் அதிதிகளாக கிழக்கு மாகாண ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், அல்- மீஷான் பௌன்டேஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான நூருல் ஹுதா உமர், அகில இலங்கை YMMA பேர‌வையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் அதிபர் எம்.ஐ.எம். றியாஸ், அட்டாளைச்சேனை YMMA கிளையின் தலைவர், மனித மேம்பாட்டு அமைப்பின் பிரதிப்பணிப்பாளர், உயர்பீட உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.

இங்கு கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.










தொழில் வழிகாட்டல் மற்றும் திறன் மேம்படுத்தல் செயலமர்வு - 2024 Reviewed by வன்னி on January 19, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.