அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

 முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரான 33 அகவையுடைய 10 ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இராசதுரை கஸ்தூரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம்  28.01.2024  மாலை இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குடும்பமாக ஆண் பெண்கள் என சுமார் 15 பேர்வரையில் வாகனத்தில் வந்து குளித்துள்ளதை கரையில் உள்ள குடும்பங்கள் கண்டுள்ளார்கள்

 குறித்த கடற்கரை பகுதியில் குளிக்க வேண்டாம் என்று அவர்களுக்க அறிவிவுறுத்தப்பட்டுள்ளதாக வாடியில்  இருந்த மீனவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் சொன்னதையும் பொருட்படுத்தாது கடலில் இறங்கிய ஆண்கள் குளித்துள்ளார்கள் இதன்போதே ஒருவர் கரையில் இருந்து சற்று தொலைவில் சென்ற நிலையில் அவர் காணாமல் போன நிலையில் அவரை காணவில்லை என கரையில் இருந்த அவரின் உறவினர்கள் கதறி அழுதுள்ளார்கள் இந்த சம்பத்தினை தொடர்ந்து அவர்கள் அங்கும் இங்கும் தேடினார்கள்

ஆனால் மீனவர்கள் படகு கூட கடலில் இறக்க முடியாத நிலையில் கடல் அடி காணப்படுகின்றது.

முல்லைத்தீவு கடல் ஒரு ஆபத்தான கடல் குறிப்பாக மாத்தளன் பகுதியில் இவ்வாறு காணாமல் போனவரின் உடலம்  நாளையதினம் அல்லது நாளை மறுதினம் எங்கோ ஒரு கடற்கரை பகுதியில் ஒதுக்கும் அப்போதுதான் உடலத்தினை மீட்கலாம் என மீனவர்கள் தெரிவித்துளார்கள்.




முல்லைத்தீவு மாத்தளன் கடலில் குளித்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார். Reviewed by வன்னி on January 29, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.