மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி.
மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி.
புத்தாண்டு பிறப்பு நள்ளிரவு திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்டத்தின் பிரதான புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பாக நடை பெற்றன.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து விசேட ஆராதனைகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து புத்தாண்டு விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர் அருட்தந்தையர்கள் , இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தை யர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.
புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.
இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் புதிய 2024 ஆம் ஆண்டு ஒரு செப ஆண்டாக திருத்தந்தையால் நியமனம் பெற்றுள்ளது.இந்நிலையில் செப ஆண்டை மன்னார் மறைமாவட்ட ஆயர் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

No comments:
Post a Comment