அண்மைய செய்திகள்

recent
-

ஜனநாயக இளைஞர் கல்விக்கூடத்தின் "பீஸ் நெட்" திட்டத்தின் சித்திரக் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!

 ஜனநாயக இளைஞர் கல்விக்கூடத்தின் "பீஸ் நெட்" திட்டத்தின் சித்திரக் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்!


எமது நாட்டில் தேர்தல் தொடர்பான விடயங்களை ஆராய்வதிலும் பக்கச் சார்பற்ற தேர்தல் செயன்முறைகளை கண்காணிக்கவும் மக்களது வாக்குரிமைகளை உறுதிப்படுத்தவும் மனித நேயத்தோடு தேர்தல் கண்காணிப்பை மேற் கொள்ளும் பஃப்ரல் நிறுவனத்தினுடைய ஜனநாயக இளைஞர் கல்வி கூடத்தின் அம்பாறை மாவட்ட மாணவர்களின் ஏற்பாட்டில் பீஸ்நெட் திட்டத்தின் அம்பாறை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களில் திறந்த அழைப்பு மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு ஏற்பாடு செய்த மாபெரும் சித்திரப் போட்டியில் ஆக்கத்திறனான சித்திரங்களை வரைந்த மாணவர்களுக்குரிய சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அதிலும் குறிப்பாக முதல் 25 ஆக்கத்திறனான சித்திரங்களை வரைந்த மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் காரைதீவு தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.


குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம அவர்களும், கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் அவர்களும், சிறப்பதிதிகளாக காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களும், காரைதீவு பிரதேச சபை செயலாளர் அ.சுந்தரகுமார் அவர்களும், ஏனைய அதிதிகளாக இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சிப்லி மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எல்.எம் இர்பான் அவர்களும், மனித அபிவிருத்தி தாபன உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள்,சங்க தலைவிகள், ஜனநாயக இளைஞர் கல்வி கூட அம்பாறை மாவட்ட பீஸ்நெட் தொண்டர்கள், பெற்றோர்கள், ஆக்கங்களுக்குரிய மாணவ மாணவிகள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








ஜனநாயக இளைஞர் கல்விக்கூடத்தின் "பீஸ் நெட்" திட்டத்தின் சித்திரக் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்! Reviewed by வன்னி on January 01, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.