சவப்பெட்டியுடன் இளைஞர்கள் போராட்டம்
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க செயலரும், செங்கலடி பிரதேச செயலரும் சட்டப்படி தமது கடமை களைப்புரிய வேண்டும் எனக் கோரி சவப்பெட்டிகளுடன் அமர்ந்து இரண்டு இளைஞர்கள் சாகும்வரை உணவு தவிர்ப்பை செங்கலடி பிரதேச செயலகம் அருகில் ஆரம்பித்துள்ளனர்.
கல், மண், கிறவல் என்பவற்றுக்கு சட்டப்படியான ஆவணம் இருந்தும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனை ஏறாவூர்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றுமாறு கோரியும் இப்போராட்டம் நடைபெறுகிறதது
No comments:
Post a Comment