துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்
துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம்
துணுக்காய் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்றைய தினம் (15) துணுக்காய் பிரதேச செயலகத்தில் காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கௌரவ இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
துணுக்காய் பிரதேச செயலாளர் திரு இராமதாஸ் ரமேஸ் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்
துணுக்காய் பிரதேசத்தின் முக்கிய விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
குறித்த நிகழ்வில் விவசாயம் ,காணி, வனவளத் திணைக்களம் , நன்னீர் மீன்பிடி , கடற்தொழில் மற்றும் மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகள் முதன்மையாக கலந்துரையாடப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மேலும் வெள்ள பாதிப்புக்கள் மற்றும் பயிர் அழிவுகள் தொடர்பாகவும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் துணுக்காய் பிரதேச சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள்,இராணுவ அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment