அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அரசியலில் ஈடுபடும் மற்றும் அரசியல் ஈடுபட காத்திருக்கும் பெண்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு.

 மன்னாரில் அரசியலில் ஈடுபடும்  மற்றும் அரசியல் ஈடுபட காத்திருக்கும் பெண்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு.



 

  மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பெண்கள் குழுக்களின் ஏற்பாட்டில் இன்று (17)மன்னாரில் ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கி  அரசியலில் ஈடுபடும்   மற்றும் அரசியலில் ஈடுபட காத்திருக்கும் பெண்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு மன்னார் நகரசபை  மண்டபத்தில் இடம்பெற்றது.


  சிறப்பு வளவாளராக  ஓய்வு பெற்ற முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்டாலின் டிமேல் கலந்து கொண்டு அவர்களால் முன் எடுக்கப்பட்டது.


இதன் போது மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய  ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கி முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளடங்களாக  45க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கு பற்றியதுடன் எதிர் காலத்தில் அரசியலில் பெண்களின் வகிபங்கு தொடர்பாகவும் இலங்கை அரசியல் உரிமைகள் தொடர்பாகவும் பெண்களின் சமத்துவம்  தொடர்பாகவும் பல்வேறு விடயங்களை  இவ் செயல் அமர்வின் மூலம் தெளிவூட்டல்களை பெற்றுக் கொண்டனர்.









மன்னாரில் அரசியலில் ஈடுபடும் மற்றும் அரசியல் ஈடுபட காத்திருக்கும் பெண்களுக்கான வலுவூட்டல் நிகழ்வு. Reviewed by வன்னி on February 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.