அண்மைய செய்திகள்

recent
-

காதலி வர மறுத்ததால் இளைஞன் எடுத்த தவறான முடிவு காதலர் தினத்தில் நடந்த விபரீதம்

 காதலி வர மறுத்ததால் இளைஞன் எடுத்த தவறான முடிவு காதலர் தினத்தில் நடந்த விபரீதம்



இறக்குவானை பிரதேசத்தில் காதல் துயரத்தால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


இறக்குவானையை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும் ,அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும் ,மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.


யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்து வந்த நிலையில், சம்பவத்திற்கு முன்தினம் இரவு தனது காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் ,அந்த அழைப்பின் பின்னர் சகோதரர் சத்தமாக அழுததாகவும், நாளை (14) காதலர் தினத்தை கொண்டாட இறக்குவானைக்கு வருமாறு தனது காதலியை இளைஞன் பலமுறை அழைப்பதை கேட்டதாகவும் இறந்தவரின் சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார்.



இறப்பதற்கு முன் குறித்த இளைஞன் தனது கையை பிளேடால் வெட்டிக் கொண்டுள்ளமையையும் மரண விசாரணை அதிகாரி அவதானித்துள்ளார்.


இந்த மரணம் தற்கொலை என தெரிவித்த மரண விசாரணை அதிகாரி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.


தற்கொலையை தடுப்போம்!

நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

தேசிய மனநல உதவி இலக்கம் 1926

இலங்கை சுமித்ரயோ 011 2696666

CCC line 1333

காதலி வர மறுத்ததால் இளைஞன் எடுத்த தவறான முடிவு காதலர் தினத்தில் நடந்த விபரீதம் Reviewed by வன்னி on February 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.