மன்னாரில் ஊடகவியலாளர்கள், இளையோருக்கு நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்
சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டில் 'பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமைக்கான பொறுப்புக்கள்' எனும் தொனிப்பொருளில் சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள், மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு தெளிவு படுத்தும் விழிப்புணர்வு கலந்துரையாடலாக இடம் பெற்றது.
இக் கலந்துரையாடலில் இச்சட்டத்தில் உள்ள நன்மை தீமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டது. சட்டம் தொடர்பான தெளிவு படுத்தல் களை சட்டத்தரணி புலனி காஞ்சனா ரணசிங்க வழங்கினார்.
இதன் போது சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் ஸனா இப்ராஹிம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
மன்னாரில் ஊடகவியலாளர்கள், இளையோருக்கு நிகழ்நிலை காப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்
Reviewed by Author
on
February 25, 2024
Rating:

No comments:
Post a Comment