அண்மைய செய்திகள்

recent
-

பெண்களை நாட்டின் மிகப்பெரிய சக்தியாக மாற்றுவோம் எதிர்க்கட்சித் தலைவர் உறுதி....

 கடந்த காலங்களில் பெண்களால் தேவேந்திர முனையிலிருந்து பேதுரு முனை வரை சிரமமின்றி பயணிக்க முடியுமாக இருந்தாலும், இன்று நாட்டில் அவ்வாறானதொரு நிலை இல்லை. சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களில் இலங்கை இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. 2023 இல் மட்டும் இவ்வாறு 9,400 குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 1,502 பாலியல் துஷ்பிரயோகங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நமது நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். நமது நாட்டில் பெண்களுக்கு பரிதாபகரமானதும்  துயரமானதுமான நிலையே நிலவி வருகிறது. இது மாற்றப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


நமது நாட்டில் சரியான பாதுகாப்பு, பொருத்தமான சூழல் மற்றும் கவனிப்பு இல்லாத காரணத்தால் தொழிலாளர் பரப்பில் 34% பணியாளர்களே பெண்களாக உள்ளனர். பெரும்பாலான பெண்கள் வீட்டிலும், போக்குவரத்தின் போதும், பணியிடத்திலும் பன்முக துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். பொருளாதார நெருக்கடி கூட பெண்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


வீட்டின் தெய்வம் தாய் என்று அழைக்கப்பட்டாலும், குழந்தையின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தாய் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை கடுமையான பிரச்சினையாக இன்று மாறியுள்ளன. மகளிர் தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டாலும் அதில் வாக்குறுதியளிக்கப்பட்ட எதுவும் இதுவரை நடக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


2019 ஜனாதிபதித் தேர்தலில் பெண்களைப் பற்றி யாரும் பேசாவிட்டாலும், பெண்களுக்கு  மட்டுமான தனியான சாசனத்தை தான் தயாரித்ததாகவும், இன்றைய அரசியலிலும் ஜனநாயகத்திலும் முக்கிய அடிமட்ட சக்தியாக பெண்கள் கருதப்பட்டாலும், பெண்கள் தற்போது வெறுமனே அரசியல் ஆயுதமாக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இந்நாட்டில் உள்ள 52% பெண்கள் அரசியல்வாதிகளிடம் இருந்து விரிவுரைகளையோ,வியாக்கியானங்களையோ எதிர்பார்க்கவில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் பதில்களையுமே எதிர்பார்க்கின்றனர். எனவே புகழ்ச்சிக் கதைகள்,வாய் வீறாப்பு கதைகளைக் கண்டு, கேட்டு ஏமாற வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


கண்டியில் நேற்று (24) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அரசியல் சாராத மகளிர் ஒப்பந்தம்,


ஐக்கிய மக்கள் சக்தி இம்முறையும் பெண்களுக்கான ஒப்பந்தத்தை கைச்சாத்திடும். இது அரசியல்வாதிகளின் கருத்துகளை மாத்திரம் கொண்டமையாது, அடிமட்ட மக்களின் கருத்துக்களையும் உள்ளடக்கி இது முறையாக அரசியல் சாராத ஒப்பந்தமாக வகுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பெண்களுக்கான ஜனாதிபதி செயலணி,


பெண்ணுக்காக ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்படும் எனவும், நாடளாவிய ரீதியில் உள்ள பெண்களை தொடர்பு கொண்டு அவருக்கு பக்க பலத்தை வழங்கும் மகளிர் ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.


ஒவ்வொரு கிராம சேவை அலுவலர் பிரிவுக்கும் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை நீக்க தேசிய போஷாக்குக் கொள்கை ஸ்தாபிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பெண்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்துவோம்,


பெண்களின் சுகாதார நலன்களை வலுப்படுத்துவோம். உரிய சுகாதார கருவிகளைப் பயன்படுத்தாததால், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் எழுவதால் அது குறித்தும் கவனம் செலுத்துவோம். பேட் மேன் என்ற புனைப்பெயர் வைத்து அழைத்தாலும் அதனை பொருட்படுத்தப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.


நுண்நிதி கடனுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்,


நுண் நிதி கடனின் கீழ் கடன் பொறியில் சிக்கியுள்ள பெண்களை பாதுகாக்க தலையிட்டு அதிலிருந்து அவர்களை விடுவித்து, வீரமிக்க பெண்களை பொருளாதார அபிவிருத்திக்கு பக்க பலத்தை நல்கும் தொழில்முனைவோராக மாற்றுவோம். பல அசௌகரியங்களுக்கு மத்தியில் உள்ள பெண்களை வீட்டுத் தலைவிகளாக் கொண்ட வீட்டு அலகுகளை இலக்காகக் கொண்டு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்துவோம்.



பெண்களை நாட்டின் மிகப்பெரிய சக்தியாக மாற்றுவோம் எதிர்க்கட்சித் தலைவர் உறுதி.... Reviewed by Author on February 25, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.