கொழும்பு - வெள்ளவத்தையில் உள்ள ஆடையகத்தில் சற்றுமுன் பாரிய தீப்பரவல் : வெள்ளவத்தையில் பரபரப்பு.
கொழும்பு - வெள்ளவத்தையில் உள்ள ஆடையகத்தில் சற்றுமுன் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பிரபல ஆடை நிறுவனமான (NOLIMIT) நிறுவனத்தின் ஆடை விற்பனை நிலையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த ஆடையகத்தில் இருந்த பொதுமக்கள் உட்பட பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலத்திரனியல் கோளறு காரணமாகவே இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு - வெள்ளவத்தையில் உள்ள ஆடையகத்தில் சற்றுமுன் பாரிய தீப்பரவல் : வெள்ளவத்தையில் பரபரப்பு.
Reviewed by Author
on
March 24, 2024
Rating:

No comments:
Post a Comment