அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைப் பெண்கள் இருவருக்கு கிடைத்த சர்வதேச கௌரவம்

 தெற்காசியாவில் தடைகளைத் தாண்டி சாதித்து, ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும்,  பெண் ஆளுமைகள் குறித்து உலக வங்கியின் பட்டியலில் இலங்கையர் இருவர் இடம்பிடித்துள்ளனர்.  


11 பேர் அடங்கிய பட்டியலில் இடம்பிடித்துள்ள இருவரும் தமிழ் பேசும் பெண்கள் என்பது விசேட அம்சமாகும்.


தொழில்முனைவோர், ஊடக நிர்வாகிகள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட மிக முக்கிய பதவிகளை வகிப்பதில் சிறந்த ஆளுமைகளை கிளிர் ஹேர் பாத் (#ClearHerPath) என்ற ஹேஷ் டெக்குடன் உலக வங்கி வெளியிட்டுள்ளது.


விழுது என்ற சிவில் சமூக அமைப்பிற்கு தலைமைத்தாங்கும் மைத்ரேயி ராஜசிங்கம் மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி வில்சன் ஆகியோரே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


தெற்காசியாவில், நான்கு பெண்களில் ஒருவர் மாத்திரமே பணிபுரிவதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பல மில்லியன் பெண்கள் வீட்டிற்கு வெளியே தொழில் அல்லது வேலையில் ஈடுபட்டு தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் வருமானம் ஈட்டி, தங்கள் சமூகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்குப் பங்களிக்கும் வாய்ப்பைப் பெறவில்லை என்பதே இதன் அர்த்தமென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பாரபட்சமான சட்டங்கள் மற்றும் கொள்கைகள், கல்வி மற்றும் பயிற்சிக்கான அணுகல் இல்லாமை மற்றும்  ஊதியம் இல்லாத வேலை மற்றும் குடும்ப பராமரிப்புப் பொறுப்புகளின் நேரத்தைச் செலவழிக்கும் சுமை உள்ளிட்ட பல தடைகளை தெற்காசியப் பெண்கள் தொழிலில் ஈடுபடுவதில் எதிர்நோக்குகின்றனர்.


எனினும், அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்து, வேலை செய்ய விரும்பும் பெண்களுக்கான பாதையைத் உருவாக்குவதற்கு, அரசாங்கங்கள், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், சமூகங்கள் மற்றும் குடும்பங்கள் பங்களிக்க முடியுமென உலக வங்கி தெரிவிக்கின்றது.



இலங்கைப் பெண்கள் இருவருக்கு கிடைத்த சர்வதேச கௌரவம் Reviewed by Author on March 07, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.