மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட உள்ளூர் உணவு உற்பத்தி களின் விற்பனை நிலையம் மற்றும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரண நிலைய திறந்து வைப்பு.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி சபையின் புலம் பெயர்ந்த உறவுகளின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் உணவு உற்பத்தி களின் விற்பனை நிலையம் மற்றும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரண நிலையம் இன்றைய தினம் வியாழக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்துகொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர், பிரதம உள்ளக கணக்காய்வாளர், புலம்பெயர் உறவுகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள், உதவி மாவட்ட அரசாங்க அதிபர், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பணிப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளூர் கைத்தொழில் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment