வவுனியா நொச்சிமோட்டை விவேகானந்தா விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுபோட்டி நிகழ்வு
நொச்சிமோட்டை விவேகானந்தா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த நாலு பேர் கொண்ட ஓவர் முறையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியானது நேற்றைய தினம் 21.04.2024 விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் கரப்பாந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது. நடைபெற்ற இந்த சுற்று போட்டியில் முதலாம் இடத்தினை தாலிக்குளம் நண்பர்கள் கழகம் A யும் இரண்டாம் இடத்தினை சாலம்பைக்குளம் அல்- அமான்A அணியினரும் பெற்றிருந்தனர்.
சிறந்த வீரராக தாலிக்குளம் நண்பர்கள் விளையாட்டு கழக வீரர் செல்வன் கஜந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டியில் வவுனியாவின் பிரபலமான பல கரப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நொச்சிமோட்டை விவேகானந்தா விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுபோட்டி நிகழ்வு
Reviewed by வன்னி
on
April 22, 2024
Rating:

No comments:
Post a Comment