ஏர்நிலம் தொண்டமைப்பினால் முல்லைதீவு தென்னியன்குளம் அரசினர் கலவன் பாடசாலையில் நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் மிதிவண்டி தரிப்பிடம் ஆகியவை புனரமைத்து கொடுக்கப்பட்டுள்ளது
17/04/2024 அன்று சுவிட்சர்லாந்து வாழ் தமிழுறவு திருவாளர் சிவரத்தினம் சரவணபவானந்தன் அவர்களின் நல்லன்பின் வெளிப்பாடாக "ஏர்நிலம்" தொண்டமைப்பின் ஊடாக ரூபாய் 134000/- பெருமதியில்
தாயகத்தின் வளப்பற்றாகுறைகளூடன் இயங்கும் முல்லைத்தீவு/தென்னியன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நீர் இறைக்கும் மின் இயந்திரம் மதிவண்டி தரிப்பிடம் எனபன புனரமைத்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு
சிறப்பாக இடம்பெற்றது….
நிகழ்விற்கு "ஏர்நிலம்" தொண்டமைப்பின் பிரதான ஆலோசகர் திருமதி சூரியகுமாரி அவர்களும் முல்லை மாவட்ட செயலாற்றுனர் திரு முறிகண்டி லக்சிதரன் மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இப் பணியை நிறைவாக்க உதவிய “ஏர் நிலம்” நிர்வாக இயங்குனர் தனம்-நித்தி,களத்துக்கும் புலத்துக்குமான இணைப்பாளர் மன்னார் பெனில் ஆகியோர்கும் அன்பும்,நன்றியும்.
திருவாளர் சீவரத்தினம் சரவணபவானந்தன் அவர்களின் 74 ஆவது அகவை நாளை மாணவர்கள் சிறப்பாக கொண்டாடினர் அத்துடன் அவர்களுக்கான சிற்றூண்டி வழங்கப்பட்டதுடன் 2024 புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்ட தரம் ஒன்று மாணவர்களுக்கான புத்தகபைகள் வழங்கப்பட்டது
பௌதிக வளங்கள் குறைந்த நிலையில் காணப்படும் பாடசாலைக்கு
இப் பணியானது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெறும் ஆறுதலே. பாடசாலைச் சமூகம்
இப் பெரும் உதவியை நல்கிய திருவாளர் சீவரத்தினம் சரவணபவானந்தன் குடும்பத்தினர்கு நன்றிகளை பகிர்ந்து நின்றனர்.

No comments:
Post a Comment