மடு பிரதேச கலைஞருக்கு மாகாண ஊக்குவிப்பு பரிசு.
எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகினால் வருடாந்தம் பிரதேச ரீதியாக எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் கலைஞர் ஊக்குவிப்பு நிதி இம்முறை 'மீ எழு தலைமை கொள்' மற்றும் ' இளமுகை' ஆகிய கவிதை நூல்களை வெளியிட்ட மடு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கலைஞருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மடு பிரதேச செயலாளர் பிரிவில் பிரிவில் உள்ள பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தைச் சேர்ந்த கவிஞர், ஆசிரியர் இ.ர. ஜெயதீபன் (மடுவன் ) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காசோலை வழங்குவது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு இன்று திங்கட்கிழமை (29) மடு பிரதேச செயலகத்தில் மடு பிரதேச செயலாளர் கீ. பீட் நிஜாகரன், தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் ரூபாய் 20,000 ரூபாய் பெறுமதியான காசோலை யை பிரதேச செயலாளரினால் கவிஞரிடம் கையளிக்கப்பட்டது.இதன் போது . பிரதேச கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் கலந்து கொண்டிருந்தார்.
மடு பிரதேச கலைஞருக்கு மாகாண ஊக்குவிப்பு பரிசு.
Reviewed by NEWMANNAR
on
April 29, 2024
Rating:

No comments:
Post a Comment