அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அரச ,தனியார் அமைப்புகளின் பணியாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு.

மன்னார் மாவட்டத்தில்  அரச திணைக்களம் மற்றும் தனியார் அமைப்புகளில் கடமையாற்றும் தெரிவு செய்யப்பட்ட  பிரதிநிதிகளை உள்ளடக்கி மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு மன்னார்  மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை(5) காலை முதல் மாலை வரை மன்னாரில் இடம் பெற்றது.


மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் சுற்றுச்சூழல் தொடர்பாகவும் குறிப்பாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.


குறிப்பாக மன்னாரில் கழிவகற்றல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் மன்னார் நகரில் ஏற்பட்டுள்ள சுகாதார பாதிப்புகள்  குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை எதிர் காலத்தில் எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.


குறிப்பாக மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தியின் சாதக பாதக நிலை,கணிய மணல் அகழ்வினால் ஏற்பட்டுள்ள சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.


குறித்த செயலமர்வில் கொழும்பில் உள்ள எஸ்.ஐ.பி.எல் நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் குறித்த நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பிரதி நிதி ஆகியோர் கலந்து கொண்டு விளக்கமளித்தனர். 








மன்னாரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அரச ,தனியார் அமைப்புகளின் பணியாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு. Reviewed by Author on April 05, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.