விடுதி ஒன்றில் ஐஸ் போதை பொருளுடன் சிக்கிய 2 பெண்கள் உட்பட ஐவர்
பத்தரமுல்லை பகுதியில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
பத்தரமுல்லை பகுதியிலுள்ள விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் போதைப்பொருளுடன் கைதாகினர் .
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாகவும், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் கட்டான பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் ஏனைய மூன்று சந்தேகநபர்களும் கொழும்பு மற்றும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைகளுக்காக தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளனர் .
விடுதி ஒன்றில் ஐஸ் போதை பொருளுடன் சிக்கிய 2 பெண்கள் உட்பட ஐவர்
Reviewed by Author
on
April 22, 2024
Rating:

No comments:
Post a Comment