அலைகடலென திரண்டு மடு அன்னைக்கு வரவேற்பு கொடுத்த யாழ் மக்கள்
மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து (Mannar) வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு (Jaffna) எடுத்து வரப்பட்டுள்ளது.
யாழ். மறைமாவட்டத்திற்கு இன்றையதினம் (06.04.2024) சனிக்கிழமை எடுத்துவரப்பட்ட திருசொரூபம் யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக் கோட்டங்களின் பங்குகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் திருச்சொரூபம் எடுத்து வரப்படவுள்ளது.
மருதமடு அன்னையின் முடிசூட்டு விழாவின் 100ஆவது ஆண்டு விழாவிற்கு ஆயத்தமாக மருதமடு அன்னையின் திருச்சொரூபமானது மன்னார் மறைமாவட்டப் பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் ஆயரின் வேண்டுகோளுக்கு அமைவாக திருச்சுரூபமானது யாழ் மறைமாவட்டத்திற்கு எடுத்து வரப்படவுள்ளது.
இந்த புனித நிகழ்வு மருதமடுத் திருத்தலத்திற்குச் சென்று வர முடியாத அன்னையின் பக்தர்களுக்குப் பெரும் ஆசீர்வாதம் ஆகும் எனவும் மருதமடு அன்னையின் வருகையைத் தகுந்த ஆயத்தத்துடன் பக்தி பூர்வமாக அனுஷ்டிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment