தமிழ் கட்சிகள் உசுப்பேத்தும் கதையே கதைப்பார்கள்!அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தமிழ் கட்சிகள் உசுப்பேத்தும் கதையே கதைப்பார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று பயணம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் புதுக்குடியிருப்பு பகுதியில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்
புதுகுடியிருப்பு பகுதியில் ஆடை உற்பத்தியினை மேற்கொண்டு வரும் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பின்போது அவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்
தமிழ் கட்சிகள் உசுப்பேத்தும் கதையினை தான் கதைப்பார்கள் அவர்களுக்கு இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான நோக்கம் இல்லை
இருப்பதை பாதுகாத்துக் கொண்டு முன்னோக்கி போவது தான் என்னுடைய திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்

No comments:
Post a Comment