கடற்றொழில் அமைச்சருக்கும் முல்லைத்தீவு மாவட்ட அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்
கடற்றொழில் அமைச்சருக்கும் முல்லைத்தீவு மாவட்ட அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிறுவன அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாலில் ஈடுபட்டார்.
இன்று (17.04.2024) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் அரசசார்பற்ற நிறுவனங்களின் கடந்தகால செயற்பாடுகள் மற்றும் நிகழ்கால வேலைத்திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் குறித்த நிறுவனங்களின் குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் அதற்கான உரிய தீர்வுகளை துறைசார்ந்தோருடன் பேசி பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
இந்த கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன்( நிர்வாகம்) , மேலதிக மாவட்ட செயலாளர் சி.ஜெயகாந் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment