வித்யா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முக்கிய குற்றவாளி திடீர் மரணம்
யாழ்ப்பாணம், புங்குடுதீவில் கடந்த 2015ஆம் ஆண்டு சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புங்குடுதீவு கைட்ஸ் பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் தவக்குமார் (37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளதாகவும்,
அவர் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
Reviewed by Author
on
April 01, 2024
Rating:


No comments:
Post a Comment