நொச்சிமோட்டை விவேகானந்தா விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த 06 பேர் கொண்ட மென்பந்து சுற்றுப்போட்டி
நொச்சிமோட்டை விவேகானந்தா விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த 06 பேர் கொண்ட மென்பந்து சுற்றுப்போட்டியானது 28.04.2024. ஞாயிற்றுக்கிழமை விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் இடம்பெற்றது. நடைபெற்ற இந்த சுற்று போட்டியில் முதலாம் இடத்தினை பரநாட்டகல் அடைக்கலமாதா A யும் இரண்டாம் இடத்தினை சாந்தசோலை பரடேஸ் அணியினரும் வெற்றிபெற்றிருந்தனர்.
வளர்ந்து வரும் இளம் வீரராக தனுசியன் (சாந்தசோலை பரடேஸ் விளையாட்டு கழகம்)
இளம் சகல துறை ஆட்டநாயகனாக வித்தியா அவர்களும் ( சாந்தசோலை பரடேஸ் விளையாட்டு கழகம்)
சிறந்த பந்துவீச்சாளராக ரொனி அவர்களும் ( பரநாட்டகல் அடைக்கலமாதா விளையாட்டு கழகம்)
சிறந்த களத்தடுப்பாளராக மகிழன் அவர்களும் ( பரநாட்டகல் அடைக்கலமாதா விளையாட்டு கழகம்)
போட்டிக்கான ஆட்டநாயனாக சுதர்சன் (பரநாட்டகல் அடைக்கலமாதா விளையாட்டு கழகம்) அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்.
வவுனியாவின் பிரபலமான மென்பந்து அணிகள் பல கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment