அண்மைய செய்திகள்

  
-

உப்பு நீரிலே விளக்கு எரிப்பதற்காக முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது

 வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் தீர்த்தம் எடுக்கும் உற்சவம்  (13) முல்லைத்தீவு பெருங்கடலில் சிறப்பாக இடம் பெற்றது 



முல்லைத்தீவு முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து தீத்தக் குடம் பாரம்பரிய வீதிகளூடாக எடுத்துச் செல்லப்பட்டு முல்லைத்தீவு தீர்த்தக்கரை பெருங்கடலிலே தீர்த்தமெடுக்கும் நிகழ்வு பக்தி பூர்வமாக இடம்பெற்றது 



உப்பு நீரிலே விளக்குகின்ற அதிசயம் நிகழ்கின்ற முல்லைதீவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற நிலைமையில் இன்றைய தினம்(13) எடுக்கப்பட்ட தீர்த்தமானது முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே மடைபரவி உப்பு நீரில் விளக்குகின்ற கண்கொள்ளாக் காட்சி தொடர்ச்சியாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும்



19.05.2024 ஞாயிற்றுக்கிழமை முதியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் உற்சவம் இடம் பெற்று  அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20 ஆம் திகதி அதிகாலை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு தீத்தக்குடம் மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது




உப்பு நீரிலே விளக்கு எரிப்பதற்காக முல்லைத்தீவு பெருங்கடலில் தீர்த்தம் எடுக்கப்பட்டது Reviewed by Author on May 14, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.