முல்லைத்தீவு பெருங்கடலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்ட தீர்த்தக்குடம்
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தினுடைய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் மிக சிறப்பம்சமாக காணப்படுகின்ற உப்பு நீரிலே விளக்கு எரிப்பதற்காக தீர்த்தமெடுகின்ற உற்சவம் இன்று(13) மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திலேயே விசேட வழிபாடுகள் இடம் பெற்றதைத் தொடர்ந்து முல்லைத்தீவு பெருங்கடலிலே தீர்த்தம் எடுப்பதற்காக தற்போது தீர்த்தக்குடம் முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய வீதிகளூடாக முல்லைத்தீவு பெருங்கடலை நோக்கி கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது
முல்லைத்தீவு பெருங்கடலுக்கு தீர்த்தக்குடம் கொண்டு செல்லப்பட்டு அங்கு விசேட வழிபாடுகளை தொடர்ந்து முல்லைத்தீவு பெருங்கடலிலே தீர்த்தம் எடுக்கப்பட்டு வழமை போன்று பாரம்பரிய வழிகளுடாக மீண்டும் முளளியவளை காட்டு விநாயகர் ஆலயத்தை வந்தடைந்து அங்கே காட்டு விநாயகர் ஆலயத்திலே விசேடமாக உப்பு நீரில் விளக்கெரிகின்ற கண்கொள்ளா காட்சி இடம்பெற இருக்கின்றது
தீர்த்தக்குடம் மீண்டும் முள்ளியவளை காட்டு விநாயகர் நோக்கி செல்லும் பாதையிலே பக்தர்கள் தீர்த்த குடத்தை வரவேற்பதற்காக கும்பங்கள் வைத்து தேங்காய்கள் உடைத்து வழிபடுவதற்காக தயாராகி வருகின்றனர்

No comments:
Post a Comment