யாழ்.போதனாவில் குழந்தையை பிரசவித்து, கைவிட்டுச் சென்ற சிறுமி பொலிஸாரிடம் சிக்கினார் : இளைஞன் ஒருவரும் கைது
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயரும் குறித்து சிறுமியுடன் உதவிக்கு நின்றுள்ளார்.
சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் சிறுமியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த சிறுமியையும் அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்குட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
யாழ்.போதனாவில் குழந்தையை பிரசவித்து, கைவிட்டுச் சென்ற சிறுமி பொலிஸாரிடம் சிக்கினார் : இளைஞன் ஒருவரும் கைது
Reviewed by Author
on
May 15, 2024
Rating:
Reviewed by Author
on
May 15, 2024
Rating:


No comments:
Post a Comment