தாய் மற்றும் மகளின் உயிரைப் பறித்த வாகன விபத்து
மாத்தளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
பலபத்வல, கிருலுகம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (22.06.24) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வத்தேகமவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் தம்புள்ளையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த தாய் 54 வயதுயடைவர் என்றும் மகள் 17 வயது சிறுமி என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளனர்.
இந்நிலையில் தந்தையும் மகனும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Author
on
June 22, 2024
Rating:


No comments:
Post a Comment