மடிக்கணினி வெடித்த விபத்தில் இரு சிறுவர்கள் பலி
பாகிஸ்தானில் மடிக்கணினி வெடித்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த 6 வயது சிறுமியும் 9 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த விபத்தில் இரண்டு பெண்களும் மற்றும் 03 முதல் 09 வயதுக்குட்பட்ட 05 சிறுவர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளில் உள்ள குறைபாடுள்ள மின்கலங்கள் (Battery) சில சமயங்களில் அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கலாம் என்பதுடன் சில வேளைகளில் அவை வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Reviewed by Author
on
June 21, 2024
Rating:


No comments:
Post a Comment