சட்டவிரோத மதுபானத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத மதுபானம் அருந்து உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நூற்றுக்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில், பலரது உடல்நலம் கலலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 23 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 10 பேர் என இதுவரையில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் 16 பேரும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Reviewed by Author
on
June 20, 2024
Rating:


No comments:
Post a Comment