மீனவர்களுக்கு இடையில் நடுக்கடலில் நடந்த மோதல் ஒருவர் பலி
பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து பல நாள் மீன்பிடி கப்பலில் பயணித்த மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த படகில் 06 மீனவர்கள் பயணித்த நிலையில் அவர்களிடையேயான மோதல் நடுக்கடலில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஏனைய மீனவர்களும் காயமடைந்ததாக பேருவளை கடற்றொழில் பரிசோதகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலின் உரிமையாளர் பேருவளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் சடலம் பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோதலில், மகொன, மாகல்கந்த பகுதியை சேர்ந்த நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
மீனவர்களுக்கு இடையில் நடுக்கடலில் நடந்த மோதல் ஒருவர் பலி
Reviewed by Author
on
June 21, 2024
Rating:

No comments:
Post a Comment