நீண்ட காலமாக மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த இராணுவ சோதனைச் சாவடி அகற்றல்
நீண்ட காலமாக மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த இராணுவ சோதனைச் சாவடி அகற்றல்
மன்னார் மாவட்டத்தின் பிரதான பாலத்தின் நுழைவுப் பகுதியில் நீண்ட காலமாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனை சாவடி அகற்றப்பட்டுள்ளது நீண்ட காலமாக இந்த சோதனை சாவடியியில் மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும் வெளி ஊர்களுக்கு செல்லும் மோட்டார் சைக்கிள் உட்பட அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
இச்சோதனை சாவடியால் போக்குவரத்து பயணிகள் மிகப்பெரும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டிருந்தனர் இந்நிலையில்மன்னார் மாவட்டத்திற்கான ஜனாதிபதி அவர்களின் விஜயத்தின் போது மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க மன்னார் பாலத்தின் அருகே அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியானது ஜனாதிபதி அவர்களின் உத்தரவின் கீழ் அகற்றப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment