அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையை பயமுறுத்தும் டெங்கு சிறுவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை

 நிலவும் மழை நிலைமை காரணமாக டெங்கு நோய் பரவல் மிகவும் உக்கிரமான நிலைக்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கையின்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றுள் கொழும்பு நகர்ப் பகுதியிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல், காலி போன்ற பிரதேசங்கள் டெங்கு பரவும் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆபத்தான சூழ்நிலையில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் கவனமும் ஆதரவும் மிகவும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டெங்கு நோயின் பரவலை விரைவாகக் கட்டுப்படுத்தாவிடின், இன்னும் சில மாதங்களிலேயே இலங்கையில் டெங்கு தொற்றுநோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிலருக்கு எந்த அறிகுறிகளும் காணப்படுவதில்லை மேலும் சிலருக்கு டெங்கு தொற்று ஒரு சாதாரண வைரஸ் தொற்றாகக் காணப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்களில் சிறு பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவது அவசியமானது எனவும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவருக்குமே காய்ச்சல் இருந்தால், அவர்கள் ஆரம்பம் முதலே ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இலங்கையை பயமுறுத்தும் டெங்கு சிறுவர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை Reviewed by Author on June 28, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.