இலங்கையில் 50 வீதமான பெண்களை வாட்டி வதைக்கும் உடல் பருமன்
இலங்கையில் உள்ள பெண்களில் 50 வீதமானவர்கள் பருமனாக இருப்பதாக இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர கூறுகையில், குழந்தைகளிடையேயும் உடல் பருமன் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.
"உடல் பருமன் பற்றி நாம் மறந்துவிட்டோம். நாங்கள் எப்போதும் ஊட்டச்சத்து குறைபாட்டின் மீது கவனம் செலுத்துகிறோம்.
ஆனால் குழந்தை பருவ உடல் பருமன் அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 50% பெண்கள் அதிக எடை மற்றும் பருமனானவர்கள்.
இதனால் இலங்கைக்கு ஒரு புதிய ஆராய்ச்சி தரவு கட்டமைப்பு தேவை." எனவும் தலைவர் கலாநிதி திமதி விக்ரமசேகர கூறினார்.
இந்நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு குறைந்துள்ள போதிலும், அதிகப்படியான போசாக்கின்மை அதிகரித்துள்ளதாக கலாநிதி திமதி விக்கிரமசேகர மேலும் தெரிவித்தார்.
Reviewed by Author
on
June 28, 2024
Rating:


No comments:
Post a Comment