நோயாளர் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் வவுனியாவில் சம்பவம்
வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில் காப்பாளராக கடமையாற்றிய இளைஞன் ஒருவர் மன அழுத்தம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த இளைஞன் வைத்தியசாலையின் 12 ஆம் விடுதியில் அனுமதிக்கபட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜீவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Reviewed by Author
on
June 27, 2024
Rating:


No comments:
Post a Comment