அண்மைய செய்திகள்

recent
-

யாழில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு!

 ஊர்காவற்துறை குறிகாட்டுவான் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை பொலிஸாருக்கு நேற்று (14) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான திடீர் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்த நபர் 45 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர் எனவும் 05 அடி 02 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



யாழில் அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்பு! Reviewed by Author on June 15, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.