மர்ம குழுவினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 16 வயது மாணவி தொடர்பில் வெளிவந்திருக்கும் அதிர்ச்சி தகவல்
கொழும்பின் புறநகர் பகுதி ஹங்வெல்ல, அம்குகம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னணி
இந்த மாணவி நேற்று தனது காதலனை சந்திக்க அம்குகம பிரதேசத்துக்கு சென்றுள்ளார். தொடர்ந்து, அதன் பின்னர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது இந்த சம்பவத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த 05 பேர் தன்னை பலவந்தமாக கடத்திச் சென்றதாகவும் ரணால - ஜல்தர பகுதியில் காணப்படும் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று பலவந்தமாக பலாத்காரம் செய்ததாகவும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளில் ஐந்து இளைஞர்கள் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவியும் கொஸ்கம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும்
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment