கனடாவில் வறுமையால் வாடும் புலம்பெயர் தமிழர்கள்
கனடாவில் வறியவர்கள் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சுமார் 25 வீதமான கனேடியர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வருமானத்தை மாத்திரம் கொண்டு மதிப்பீடுகள் இடம்பெறாது கொள்வனவுகள் உள்ளிட்ட சிலவற்றையும் கருத்திற்கொண்டு மதிப்பீடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னரை விடவும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்வதாக தவகல்கள் வெளியாகியுள்ளன. வறுமையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறு மில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய மற்றும் எதிர்பாராத ஏனைய செலவுகளுக்களின் அடிப்படையில் மக்களின் வறுமை தொடர்பில் கனவம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 18 முதல் 30 வயதானவர்களும், ஒற்றைப் பெற்றோர்களை கொண்டோரும் வாடகை வீடுகளில் தங்கியிருப்போரும் வறுமையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாடகை வீடுகளில் தங்கியிருப்போரில் 40 வீதமானோர் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளமை மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளது.
கனடாவில் வீட்டு வாடகைத் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது.மே மாதத்தில் கனடாவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை இலங்கை ரூபாப்படி 630,000 ஐ (2,200 அமெரிக்க டொலர்கள்) தாண்டியுள்ளது.
இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீட்டு வாடகைத் தொகை 9.3 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் வாடகைக்கு வீடுகளைத் தேடுவோரின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் வாடகைத் தொகை அதிகரித்துள்ளதால் கனேடிய மக்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் நிலையில் வீட்டு வாடகை அதிகரிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் தமிழ் மக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment