குடிநீர் தொடர்பில் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவிப்பு
தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீர் சுத்தமானது எனவும் பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி அந்நீரைப் பயன்படுத்த முடியும் எனவும் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் நீரின் சுகாதாரத் தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் அங்கு தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால், பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி நீரைப் பயன்படுத்த முடியும் எனவும் நீர் விநியோகம் தொடர்பில் பிரச்சினைகள் இருக்குமாயின் 1939 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குடிநீர் தொடர்பில் தேசிய நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிவிப்பு
Reviewed by Author
on
June 12, 2024
Rating:
.jpg)
No comments:
Post a Comment