மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக இன்றைய தினம் வியாழக்கிழமை(13) மன்னார் தபாலக ஊழியர்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தபால் துறையில் நிலவும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்ப தவறியமை,உரிய பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (13) போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்திற்கு அஞ்சல் அதிபர்கள் ஆதரவளிக்காத நிலையில் ஏனைய அஞ்சல் அலுவலக சேவைகள் மன்னார் மாவட்ட அஞ்சல் திணைக்களத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்
Reviewed by Author
on
June 13, 2024
Rating:

No comments:
Post a Comment