பெரிய இலக்குகளை கண்டு பயப்படாதீர்கள்-மன்னாரில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த கிறிஷேறா சேவியர்
மன்னார் மாவட்டத்தில் நீண்ட இடைவெளியின் பின்னர் மன்/புனித சவேரியார் பெண்கள் கல்லூரி மாணவி கிறிஷேறா சேவியர் 3 A சித்தி பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 27 இடத்தையும் பெற்று super merit ஊடாக மருத்துவ துறைக்கு தெரிவாகி மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கிறிஷேறா சேவியர் புலமை பரிசில் பரீட்சையில் 185 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் 4 நிலையை பெற்றிருந்ததோடு க.பொ.த சாதாரண பரீட்சையில் 9A சித்திகளையும் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் இம்முறை வெளியான உயர்தர பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 3A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றது மாத்திரம் இல்லாமல் 7 வருடங்களின் பின்னர் தேசிய ரீதியில் 27 வது நிலையை பெற்று சூப்பர் மெரிட் தேர்ச்சி பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகியுள்ளார்.
இந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிறிஷேறா சேவியர்,,
இருதய சிகிச்சை நிபுணராக வைத்திய துறையில் மிளிர வேண்டும் என்பதே எனது ஆசை. பெரிய இலக்குகளை கண்டு பயப்பட வேண்டாம் , திட்டமிட்டு செயல்பட்டால் எமது இலக்குகளை அடைய முடியும் எனவும் தெரிவித்தார்.
பாடசாலையில் பல்வேறு வள பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவை இந்த பெறுபேற்றை பெற தனக்கு உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
என்னை போன்ற பல திறமை பெற்ற மாணவர்கள் பாடசாலையில் இருப்பதாகவும் பாடசாலையில் காணப்படும் வளப் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் பட்சத்தில் என்னை போல் இன்னும் பலர் அதி உயர் திறமை சித்திகள் பெறுவார்கள்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கிறிஷேறா சேவியர் கோரிக்கை விடுத் துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment