மன்னாரில் பின்தங்கிய கிராமமான கூராய் பகுதியில் குள புனரமைப்பு ஆரம்பம்...
மன்னார் மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய கிராமமாகவுள்ள கூராய் கிராமத்தின் முக்கிய குளமாகிய கூராய் குள புனரமைப்பு வேலைத்திட்டம் PSDE திட்டத்தின்கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அத்துடன் வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான வீதியும் துப்பரவாக்கப்பட்டது. மாவட்ட செயலாளரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வில் பிரதேச செயலாளர், பிரதிநீர்பாசன பணிப்பாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,நீர்பாசன பணிப்பாளர் மன்னார் பிரதி வனபாதுகாப்பு உத்தியோகத்தர், பணிப்பாளர் (வி. அ. தி.) கிராம அலுவலர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மன்னாரில் பின்தங்கிய கிராமமான கூராய் பகுதியில் குள புனரமைப்பு ஆரம்பம்...
Reviewed by Author
on
June 21, 2024
Rating:

No comments:
Post a Comment